கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!

Bookmark and Share

கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் கிஷோர். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து அவரே கூறியிருக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கபாலி’ படத்தில் நானும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரு மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தினோம்.

இந்த குழுவோடு இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். என் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார். 

மேலும், ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, நான் ரஜினி சாரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை நேரில் பார்க்கும்போது அவ்வளவு எளிமையாக, எல்லோரிடமும் சகஜகமாக பழகினார். தான் ஒரு பெரிய ஸ்டார் என்ற தலைக்கணம் அவரிடம் துளியும் இல்லை என்று கூறினார். 

‘கபாலி’ படத்தை ‘அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, மைம் கோபி, கலையரசன், தினேஷ்,  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்
நடிகையை கடித்த நாய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions