கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்

Bookmark and Share

கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்

கன்னடத்தில் ஹீரோவாக நடித்து வந்த கிஷோர் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு அவர் பல படங்களில் வில்லனாக நடித்தாலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது அவர் காதலியை காணவில்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடிகார மனிதர்கள் என்ற மற்றொரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வந்து வறுமையில் வாடுபவராக நடிக்கிறார். அவரது நண்பராக கருணாகரன் நடிக்கிறார். ஷெரின் என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். உமா ராவ், பாலா சிங், தயாரிப்பாளர் பிரதீப் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

"எல்லோருமே கடிகாரத்துக்கு அடிமையாக வாழ்கிறார்கள். காலையில் 9 மணிக்கு வேலைக்கு சென்று 6 மணிக்கு திரும்பும் இயந்திர வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்.

இந்த வாழ்க்கை சூழலுக்குள் கிராமத்தில் இயற்கையோடு வாழ்ந்தவன் வந்து சிக்கிக் கொண்டால் அவன் நிலைமை எப்படி இருக்கும் என்பதுதான் படம். கிராமமும், நகரமும் கலந்த ஒரு முகம் தேவைப்பட்டது. கிஷோரிடம் கதை சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டு நடிக்கிறார்" என்றார் இயக்குனர் வைகறை பாலன்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்
நடிகையை கடித்த நாய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions