மீண்டும் ஆரம்பமாகும் கிட்னா

Bookmark and Share

மீண்டும் ஆரம்பமாகும்  கிட்னா

நிமிர்ந்து நில் படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் ஆரம்பமான படம்  கிட்னா அவரே படத்தின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்க இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமாகி சில நாட்கள் நடைபெற்றது. அதன் பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

சமுத்திரக்கனியும் ஒரு நடிகராக பல படங்களில் நடித்து வந்ததாலும், நிதிப் பிரச்சனையாலும் படம் தற்காலிகமாக நின்றிருந்தது. தற்போது, கிடப்பில் போடப்பட்ட கிட்னா வை மீண்டும் ஆரம்பிக்க உள்ளார் சமுத்திரக்கனி.

இந்தப் படத்தில் 28 வயது முதல் 60 வயது வரை உள்ள நான்கு விதமான தோற்றங்களில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இறங்கிவிட்டால் வேறு எந்தப் படத்திலும் நடிக்க முடியாது என்பதாலேயே நடிப்பதற்காக ஒத்துக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்து விட்டு வர நேரமாகிவிட்டது என்கிறார் சமுத்திரக்கனி. 

மற்றும் இந்தப் படத்தில் மகிமா, அகிலா கிஷோர், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க உள்ளதாக அப்போது செய்திகள் வெளிவந்தன. அதில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா அல்லது அவர்களே தொடர்வார்களா என்பது இனிதான் தெரிய வரும். மலைவாழ் மக்களைப் பற்றிய கதை என்பதால் இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் பேசப்படக் கூடிய ஒரு படமாக உருவாக்கும் லட்சியத்தில் இருக்கிறேன் என்கிறார் சமுத்திரக்கனி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions