20 ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கே.ஜே.ஜேசுதாஸ்

Bookmark and Share

20 ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கே.ஜே.ஜேசுதாஸ்

பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் 20 ஆண்டுகள் கழித்து ஹிந்திப் படம் ஒன்றில் பாடலைப் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மற்ற மொழிகள் என ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளவர் ஜேசுதாஸ். ஹிந்தியில் 70களில்  பின்னணிப் பாடகராக அறிமுகமாகி பல ஹிட் பாடல்களைப் பாடினார்.

ரவீந்திர ஜெயின் இசையமைப்பில் 1976ம் ஆண்டு வெளிவந்த 'சிட்சோர்' படத்தில் அவர் பாடிய 'கோரி தேரா....' பாடல் தென்னிந்தியாவில் கூட சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

இப்போது ஜேசுதாசைப் பற்றிப் பேசுபவர்கள் அந்தப் பாடலைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். கண்பார்வையற்றவரான ரவீந்திர ஜெயின் தனக்கு கண்பார்வை கிடைக்கப் பெற்றால் தான் பார்க்கும் முதல் மனிதராக கே.ஜே.ஜேசுதாஸ்தான் இருப்பார் என்று சொல்லி அவர் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார்.

இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் ஜேசுதாஸ் பாடியுள்ளார். கடந்த 20 வருடங்களாக ஹிந்தியில் எந்தப் பாடலையும் பாடாத ஜேசுதாஸ் தற்போது 'பேர்ஃபூட் டூ கோவா' என்ற ஹிந்திப் படத்தில் ரோகித் சர்மா இசையமைப்பில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

படத்தின் இயக்குனரான பிரவீன் மொர்ச்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை ஜேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரைத் தொடர்பு கொண்டு சென்னைக்கே வந்து பாடலைப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு நாளில் 16 பாடல்கள் வரை பாடி ரிக்கார்ட் செய்துள்ள ஜேசுதாஸ் இந்தப் படத்தின் பாடல் மிகச் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக சுமார் 4 மணி நேரம் எடுத்துக் கொண்டு பாடலை அற்புதமாகப் பாடியுள்ளாராம். ஏப்ரல் 10ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
யேசுதாஸுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி
கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்
ஜேசுதாசுக்கு பாதபூஜை செய்த எஸ்.பி.பி..!
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்
பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியும் சர்ச்சை: பாடகர் யேசுதாஸ்க்கு ஆண்கள் சங்கம் ஆதரவு
ஜீன்ஸ் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது: பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் சர்ச்சை
\'கத்தி\' - அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions