எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்

Bookmark and Share

எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமாகிவிட்டார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பாக இருக்கிறது. எம்.எஸ்.வி.யின் மறைவையொட்டி திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ், எம்.எஸ்.வியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யேசுதாஸ்... சங்கீதத்தில் பல சாதனைகளை செய்துவிட்டு மறைந்துவிட்டார் எம்.எஸ்.வி., ஆனால் அவர் இசையமைத்த சங்கீதம் என்றும் மறையாது. மேற்கொண்டு அவரைப்பற்றி பேச வார்த்தைகள் வரவில்லை என்றார்.

இசையமைப்பாளர் இமான், எம்.எஸ்.வி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேசும்போது, இன்றைக்கு கருப்பு தினம் என்றே சொல்லலாம். இசை துறைக்கு மிகப்பெரிய இழப்பு இன்று. என்னைப்போன்ற இளைய தலைமுறையினருக்கு உந்துதலே எம்.எஸ்.வி. அவர்கள் தான். அவர் மறைந்தாலும் அவர் இசையும், புகழும் காலம் கடந்து பல தலைமுறைகள் பேசும் என்றார்.


Post your comment





Related News
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
யேசுதாஸுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி
கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions