கே.என்.காளை மறைவுக்கு​ ​தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

Bookmark and Share

கே.என்.காளை மறைவுக்கு​ ​தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் மற்றும் பொருளாளர், மூத்த நடிகர் திரு.கே.என்.காளை அவர்கள் சனிக்கிழமை அன்று இரவு திடீர் மரடைப்பால் காலமானார்.

அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் செயற்குழு உறுப்பினரும் டிரஸ்ட்டியுமான திரு.ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள் திரு.மனோபாலா, திரு.எம்.ஏ.பிரகாஷ், திரு.மருதுபாண்டியன், திருமதி.சிவகாமி ஆகியோர்கள் நேற்று அவரது இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

திரு.கே.என்.காளை அவர்கள் திரைப்படம் மற்றும் நாடகத்துறையில் அரும்சேவை ஆற்றியவர். அவரது மறைவு கலைத்துறைக்கும் நடிகர் சங்கத்திற்கும் மிக பெரிய இழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடையும் தென்னிந்திய நடிகர் சங்கம் பிராத்திக்கிறது.

இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions