கோ 2 படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு

Bookmark and Share

கோ 2 படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011-ஆம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கோ’. இதில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் ஜீவா புகைப்பட கலைஞராக நடித்திருந்தார்.

சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியில் உருவான இக்கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘கோ-2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இதில் பாபி சிம்ஹா நாயகனாகவும் நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சரத் என்பவர் இயக்கி வருகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. தற்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘கோ’ முதல் பாகத்தைவிட இதன் இரண்டாம் பாகம் ரசிகர்களை வெகுவாக கவரும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions