அரசியல் வாழ்க்கையின் நிஜங்களை கோடிட்டு காட்டும் கோ-2

Bookmark and Share

அரசியல் வாழ்க்கையின் நிஜங்களை கோடிட்டு காட்டும் கோ-2

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் ஆகியோரது நடிப்பில் புதுமுக இயக்குனர் சரத் இயக்கத்தில் பொலிடிக்கல் திரில்லராக உருவாகி வரும் படம் ‘கோ-2’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் மற்றும் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படம் மற்றும் நடிகர்கள் குறித்து இயக்குனர் சரத் கூறும்போது, “படம் இயக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் இப்பொழுது இருக்கும் ட்ரெண்டிலிருந்து மாறுபட்ட ஒரு படம் எடுக்க எண்ணினேன்.

ஒரு பொலிடிக்கல் சப்ஜெக்ட் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் இருந்தும் கருதப்பட்டதால் இந்த கதையை படமாக்க முடிவு செய்தோம். ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிக் கண்ட ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் ‘கோ’ என்பதால் அதன் அடிப்படையில் ‘கோ-2’ என டைட்டில் வைத்தோம்.

‘கோ-2’ திரைப்படம் ‘கோ’ படத்தின் தொடர்ச்சி கிடையாது. எனினும் கோ படத்தில் இருந்த அத்தனை அம்சங்களும் இதிலும் இருக்கும். ‘கோ-2’ டைட்டில் எனக்கு அதிகபடியான பொறுப்பை அளித்திருப்பதும் உண்மை.

இரு தேசிய விருது நடிகர்களை இயக்குவது அவ்வளவு அரிதான இன்பம். பிரகாஷ் ராஜ் கதையை கேட்டு மகிழ்ந்து போனார். ஒவ்வொரு ஷாட்டிலும் அவரது நடிப்பு சிலிர்ப்பூட்டுகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய விருது என்னும் இமாலயத்தை எட்டி பிடித்துள்ளார் பாபி சிம்ஹா. தன்னால் இதற்கு மேலும் செய்ய முடியும் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் ஒரு நடிகர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஒருவரை ஒருவர் யார் மிஞ்சுவது என்ற போட்டி காண்பதற்கு அற்புதமாய் இருக்கும்.” என்றார்.

“ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் இயக்குனர்களின் இடம். படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் எங்களது தயாரிப்பாளர் படப்பிடிப்புக்கு தேவையான அனைத்தையும் உடனுக்குடன் கிடைக்கச் செய்தார்.

லியோன் ஜேம்ஸ் என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகப் படுத்தியுள்ளோம். திரை இசையில் இவர் நிறைய சாதிப்பார் என்பதற்கு இவர் இசை அமைத்து கொடுத்து உள்ள பாடல்களே அத்தாட்சி. எல்லா வகையான ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் அரசியல் வாழ்க்கையின் நிழல் உலக விஷயங்களை பற்றி கோடிட்டு காட்டும் இந்த கோ-2.” என நிறைவு செய்தார் இயக்குனர் சரத்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions