கோச்சடையான் பட நிறுவன இயக்குனர்களுக்கு பிடிவாரண்டு!

Bookmark and Share

கோச்சடையான் பட நிறுவன இயக்குனர்களுக்கு பிடிவாரண்டு!

ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படத்தை தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் ஆட் பீரோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கியது.

லாபத்தில் 20 சதவீதம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.10 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த கடனை திருப்பி செலுத்தும் வகையில் மீடியா ஒன் நிறுவனம் சார்பில் ரூ.3 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டது. ஆனால் பாங்கியில் பணம் இல்லாததாக காசோலை திரும்பியது.

இதையடுத்து மீடியா ஒன் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சென்னை பெருநகர 13–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மீடியா ஒன் நிறுவன இயக்குனர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

கோர்ட்டில் ஆஜராக இயலாதது குறித்து அவர்கள் தரப்பில் கோர்ட்டில் காரணம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட்டு கோபிநாதன், வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த மீடியா ஒன் நிறுவன இயக்குனர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை ஜனவரி 7–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 


Post your comment





Related News
அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!
கோச்சடையான் தயாரிப்பாளர்களுக்கு பிடிவாரண்டு
கோச்சடையான் பார்த்து காசை வேஸ்ட் பண்ணிய ரசிகர்களுக்கு \'லிங்கா\' கட்டணத்தில் தள்ளுபடி?
கோச்சடையான் சாதனை முறியடிக்குமா லிங்கா?
நான் சம்பாதிச்சதை சவுந்தர்யா வேஸ்ட் பண்ணாம இருந்தாலே போதும்- ரஜினி
ஆண்ட்ராய்டில் \'கத்தி\' படத்தின் கேம்!
ஜப்பானின் அடுத்த ரஜினிகாந்த் ஸ்ரீதேவி: இங்லீஷ் விங்லிஷ் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்
கோச்சடையான் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை - ஐஸ்வர்யா தனுஷ்
கோச்சடையான் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் உருவாக்கிய ட்ரைலர் - இணையத்தில் பெரும் வரவேற்பு
ரிலிஸாகும் முன்பே விருது பெற்று ”கோச்சடையான்” சாதனை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions