பிரபுதேவாவின் உதவியாளர் இயக்கியிருக்கும் கோடை மழை

Bookmark and Share

பிரபுதேவாவின் உதவியாளர் இயக்கியிருக்கும் கோடை மழை

‘கோடை மழை’ என்னும் பெயரில் புதுப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இதில் கண்ணன் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் களஞ்சியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கதிரவன் இயக்கியிருக்கிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு சாம்பசிவம் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் கதிரவன் பேசும்போது, ‘கோடை மழை’ எனக்கு முதல் படம். நான் பிரபு தேவாவிடம் உதவியாளராக பணிப்புரிந்திருக்கிறேன்.

நாயகன் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். இவர் கோடை விடுமுறையில் தன் ஊருக்கும் வரும்போது, மழை காலத்தில் ஊருக்கு வரும்போது, கதை உருவாக்கப்பட்டிருப்பதால் ‘கோடை மழை’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். களஞ்சியம் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தில் நெகட்டிவ் ரோல் கிடையாது.

காதல் இருந்தாலும் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்திருக்கிறேன். 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நாளை இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது. 1ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

நான் சங்கரன் கோவில் ஊரில் பிறந்தவன். இந்த ஊரில் அதிக பேர் ராணுவத்திலும், போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள மக்களின் கதையை எடுக்க ஆசைபட்டேன். அதன்படி ‘கோடை மழை’ படத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என்றார். 


Post your comment





Related News
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
நடிகர்களைவிட நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர்
இலக்கை நோக்கும் மழைத்துளி!
நாஞ்சில் வழங்கும் நட்சத்திர மழை!
பரதம் ஆடியவர் ஹீரோயின் ஆனார்
தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் துன்பத்தை சொல்லும் படம்
நனையாத மழையே படத்தின் மூலம் உதவி இயக்குனர் கதாநாயகன் ஆனார்
விஜய் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் மற்றும் கதாநாயகி !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions