கோவை கல்லூரியில் தனுஷின் கொடி படப்பிடிப்பு: மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

Bookmark and Share

கோவை கல்லூரியில் தனுஷின் கொடி படப்பிடிப்பு: மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

காக்கி சட்டை, எதிர்நீச்சல் பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் கொடி. இதில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வுண்டர் பார் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

அரசியல் தொடர்பான ஆக்ஷன் கதையாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக கோவை மற்றும் புறநகர் பகுதியான பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

முதல் கட்டமாக திரிஷா நடித்த காட்சிகளை டைரக்டர் துரை செந்தில் படமாக்கினார். இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் காட்சி படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காட்சி படமாக்க முடிவு செய்யப்பட்டது.

தகவலறிந்ததும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த கல்லூரியில் திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்தனர்.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மீண்டும் காட்சியை படமாக்கினர். அப்போது நடிகர் தனுஷ் கல்லூரிக்கு வந்தார். அவர் கல்லூரி வகுப்பறையில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து அரசியல்வாதி தோற்றத்தில் மாணவர்களிடம் பேசுவது போல் காட்சி படமாக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு தான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்று விட்டார்.


Post your comment





Related News
மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு
கொடி தமிழக வசூல் விவரம் வெளியானது!
கொடி படத்தின் ஓவர்சீஸ் வசூல் விவரம் இதோ!
தனுஷுக்கு ரசிகர்கள் கொடுக்கும் இரட்டை தீபாவளி
‘கொடி’க்காக தமிழகம் முழுவதும் சுற்றும் தனுஷ், த்ரிஷா!
கொடி சென்சார் விவரம் வெளியானது!
இத்தனை கோடிக்கு விலைபோனதா கொடி?
கொடி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கொடி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கொடி ஆடியோ விரைவில் – தனுஷ் அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions