50வது நாளில் கொம்பன்

Bookmark and Share

50வது நாளில் கொம்பன்

பலத்த சர்ச்சைகளுக்கிடையே கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளிவந்த  கொம்பன் திரைப்படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளை எட்டியுள்ளது.

வெளியீட்டிற்கு முன்னதாக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தப் படம் வெளியானால் சாதி மோதலை ஏற்படுத்தும் எனக் கூறி படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், நீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குள் திரைப்பட சங்கங்கள் அனைத்தும் ஒன்று கூட இந்தப் படம் வெளிவருவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இப்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்தாலும் ஒரு அருமையான குடும்பக் கதையுடன் மாமனார், மருமகன் இடையிலான பாசக் கதையை அற்புதமாகச் சொல்லிய இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

தமிழ்நாடு முழுவதும் வெளிவந்த சில நாட்களிலேயே நல்ல வசூலையும் பெற்றது.  மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த இந்தப் படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பும் படத்தில் சிறப்பாக அமைந்து பாராட்டப்பட்டது.  குட்டிப் புலி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்று முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions