உத்தமவில்லனுக்கு முன்னதாகவே கொம்பன் வெளியீடு!

Bookmark and Share

உத்தமவில்லனுக்கு முன்னதாகவே கொம்பன் வெளியீடு!

பிரியாணி, மெட்ராஸ் என அடுத்தடுத்து தன் படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பில் உற்சாகத்திலிருக்கிறார் கார்த்தி. அதோடு, தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் கொம்பன் படத்தின் மீதும் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்.

 பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்து வேடத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் இது. சசிகுமாரை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கி வருகிறார்.

கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனனும், அவரின் அப்பாவாக ராஜ்கிரணும் நடித்திருக்கிறார்கள்.  ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையமைத்திருக்கிறார். கொம்பன் படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.

ஏப்ரல் 2ஆம் தேதி கமலின் உத்தம வில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களோடு கொம்பன் படத்தை வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது ஏப்ரல் 2ஆம் தேதிக்கு  ஒரு வாரம் முன்பே, அதாவது மார்ச் 27ஆம் தேதியே கொம்பன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தேதியில் சிம்புவின் வாலு படமும் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அதே தேதியில் கொம்பன் படத்தை வெளியிடுவது என தீர்மானித்துவிட்டனர். 


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
கொம்பன் கதைக்கு உரிமை கொண்டாடும் உதவி இயக்குநர்
50வது நாளில் கொம்பன்
கொம்பனை தொடர்ந்து ஆம்பள விஷாலை இயக்கும் முத்தையா
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
கொம்பன் பட இயக்குனருடன் இணையும் விஷால்?
கொம்பனுக்காக வெயிட் பண்ணும் கோகுல்!
சிறுத்தை, மெட்ராஸ் வசூல் சாதனையை முறியடித்த கொம்பன்
கொம்பன் வசூல்.... 5 நாட்களில் 21 கோடி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions