ஆடியோ கம்பெனி தொடங்கிய ஸ்டுடியோகிரீன்!

Bookmark and Share

ஆடியோ கம்பெனி தொடங்கிய ஸ்டுடியோகிரீன்!

ஏ.ஆர்.ரகுமான் தவிர மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமையை வாங்க ஆடியோ கம்பெனிகள் அர்வம் காட்டுவதில்லை. அப்படியே வாங்கினாலும் அடிமாட்டுவிலைதான். எனவே இசையமைப்பாளர்கள் பலரும் சொந்தமாகவே ஆடியோ கம்பெனிகளை ஆரம்பித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனங்களும் கூட சொந்தமாக ஆடியோ கம்பெனிகளை ஆரம்பிக்கின்றன. இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக ஸ்டுடியோகிரீன் நிறுவனம் சேர்ந்திருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக வளர்ந்துவிட்டது ஸ்டுடியோகிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் நிர்வாகத்தில் உள்ள ஸ்டுடியோகிரீன் நிறுவனம்.

இந்நிலையில் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் புதிதாக ஆடியோ நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறது. 'கிரீன் ஆடியோ' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் முதல் ஆடியோ வெளியீடாக கார்த்தி நடிக்கும் 'கொம்பன்' படத்தின் பாடலிசை வரவிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வரும் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'மாஸ்' படத்தின் ஆடியோவையும், 'கிரீன் ஆடியோ' நிறுவனமே வெளியிடுகிறது.


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
கொம்பன் கதைக்கு உரிமை கொண்டாடும் உதவி இயக்குநர்
50வது நாளில் கொம்பன்
கொம்பனை தொடர்ந்து ஆம்பள விஷாலை இயக்கும் முத்தையா
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
கொம்பன் பட இயக்குனருடன் இணையும் விஷால்?
கொம்பனுக்காக வெயிட் பண்ணும் கோகுல்!
சிறுத்தை, மெட்ராஸ் வசூல் சாதனையை முறியடித்த கொம்பன்
கொம்பன் வசூல்.... 5 நாட்களில் 21 கோடி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions