'கொம்பன்' 800 தியேட்டர்களில் ரிலீஸ்...!

Bookmark and Share

'கொம்பன்' 800 தியேட்டர்களில் ரிலீஸ்...!

ஒரு படம் வெளியானால் முன்பெல்லாம் எத்தனை நாட்கள் ஓடியது என்றுதான் பார்த்தார்கள். 50 நாட்களை கடந்தால் சுமாரான வெற்றிப் படமாகவும், 100 நாட்களைக் கடந்தால் வெற்றிப் படமாகவும், 150 நாட்களைக் கடந்தால் அமோக வெற்றிப் படமாகவும், கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.

அப்படிப்பட்ட வெற்றிகளை ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடினார்கள். ஆனால், இப்போதோ நிலைமை மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையை ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் மட்டுமே பெற்றது.

இப்போதெல்லாம் ஒரு படத்தின் வசூலைப் பற்றியும், அந்தப் படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பதைப் பற்றியும்தான் பேச்சுக்கள் அதிகமாக உள்ளது. படம் வெளியான மறுநாளே 'அமோக வெற்றி, மாபெரும் வெற்றி' என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

சமீப காலமாக சில பெரிய படங்கள் உலகம் முழுவதும் எவ்வளவு திரையரங்குகளில் வெளியாகிறது என்பதுதான் பெரிதாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்களால், குறிப்பாக இலங்கைத் தமிழர்களால் இன்று தமிழ் சினிமாவின் வியாபார வட்டம் பெருகிக் கொண்டே வருகிறது.

அந்த விதத்தில்  கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்துள்ள கொம்பன் படம் உலகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். படம் வெளிவர இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிறார்கள்.  

இனி படங்கள் ஓடும் நாளை விட்டுவிட்டு, எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பதற்காக விழா கொண்டாட வேண்டிய நிலை வந்து விடும் போலிருக்கிறது. அந்த நிலை, அப்படியே எத்தனை காட்சிகளுக்கு என்று மாறாமல் இருந்தால் போதும்.


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
கொம்பன் கதைக்கு உரிமை கொண்டாடும் உதவி இயக்குநர்
50வது நாளில் கொம்பன்
கொம்பனை தொடர்ந்து ஆம்பள விஷாலை இயக்கும் முத்தையா
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
கொம்பன் பட இயக்குனருடன் இணையும் விஷால்?
கொம்பனுக்காக வெயிட் பண்ணும் கோகுல்!
சிறுத்தை, மெட்ராஸ் வசூல் சாதனையை முறியடித்த கொம்பன்
கொம்பன் வசூல்.... 5 நாட்களில் 21 கோடி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions