கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை : கோர்ட்

Bookmark and Share

கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை : கோர்ட்

கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது.

கொம்பன் படத்தில் சாதிய மோதலை தூண்டும் வசனங்கள் இருப்பதாகவும், படம் வெளியானால், தென்மாவட்டங்களில் பெரிய அளவிலான வன்முறை ஏற்படும் என்றும், படத்தை விடுமுறை நாளில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.

படத்தை மீண்டும் தணிக்கை குழுவினர் பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன் மற்றும் ஆறுமுக பெருமாள் ஆதித்தன்.  

நீதிபதிகள், தயாரிப்பாளர், கிருஷ்ணசாமி தரப்பினர் என 10 பேர் கொண்ட குழு, படத்தை பார்த்து, நீதிபதிகள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனிடையே, அவர்களுக்கு நேற்று படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி தரப்பினர், படத்தை தொடர்ந்து மறுமுறை போட்டு காட்ட வலியுறுத்தியதை தொடர்ந்து கோபமுற்ற நீதிபதிகள், பாதியிலேயே ப்ரிவியூ தியேட்டரிலிருந்து வெளியேறினர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions