தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!

Bookmark and Share

தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!

கொம்பன் படத்திற்கு பிரச்னைகள் எழுந்த போதும், அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து ஒருநாள் முன்னதாகவே இன்று ரிலீஸானது கொம்பன் படம். மெட்ராஸ் படத்திற்கு பிறகு கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கொம்பன். குட்டி புலி படத்தை இயக்கிய முத்தையாக இயக்கியுள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையேயான உறவு தான் படத்தின் ஒன்-லைன் ஸ்டோரி. இதில் பாசம், காதல், குடும்ப சென்டிமென்ட் என ஒரு ஜனரஞ்கமான கிராமத்து பின்னணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் முத்தையா.

இப்படம் ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி இப்படத்திற்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் ஐகோர்ட் கிளை உத்தரவு படி இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு கொம்பன் படத்தை நேற்று காலை பார்த்தனர். படம் பற்றிய தங்களது கருத்தை அறிக்கையாக கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

இதுதொடர்பான தீர்ப்பு இன்று மதியம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தை திரையுலகினருக்கு நேற்று திரையிட்டு காண்பித்தார் ஞானவேல் ராஜா. தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என அனைத்து நிர்வாகிகளும் படத்தை பார்த்து படத்தில் எந்தவிதமான சர்ச்சை காட்சிகள் இல்லை என்று தங்களது கருத்தை தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி ஒட்டு மொத்த திரையுலகமும் கொம்பன் படத்திற்கு ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஞானவேல் ராஜா படத்தை ஒரு நாள் முன்னதாகவே, அதாவது, இன்று ஏப்ரல் 1ம் தேதியே ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்தார். அதன்படி தடைகளை எல்லாவற்றையும் உடைத்தெறிந்து கொம்பன் படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸானது.

 


Post your comment





Related News
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
\'கொம்பன்\' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
அன்று சண்டியர், இன்று கொம்பன்... - இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி? - சீமான்
முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு
350 தியேட்டர்களில் கொம்பன்!
கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!
கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!
பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!
மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions