'கொம்பன்' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்

Bookmark and Share

'கொம்பன்' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்

கொம்பன் படப்பிடிப்பின்போது தான் தங்குவதற்காக தனது நண்பர் குடும்பத்தோடு வீட்டை காலி செய்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 1ம் தேதி வெற்றிகரமாக ரிலீஸானது.

கொம்பன் படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பர் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சென்னையில் நடந்த கொம்பன் பட வெற்றி விழாவில் கார்த்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

நாங்கள் கொம்பன் படப்பிடிப்பில் இருந்தபோது தங்குவதற்கு இடம் இல்லை. அதனால் நான் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். அவரும், அவரது குடும்பத்தாரும் என்னை சிரித்த முகத்தோடு வரவேற்றனர்.

நான் வசதியாக தங்க வேண்டி அவர் தனது குடும்பத்தோடு வீட்டை காலி செய்து சென்னைக்கு சென்றுவிட்டார். படப்பிடிப்பு நடந்து முடியும் வரை அவர் சென்னையில் தங்கியிருந்தார். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார்.


Post your comment





Related News
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!
கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
அன்று சண்டியர், இன்று கொம்பன்... - இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி? - சீமான்
முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு
350 தியேட்டர்களில் கொம்பன்!
கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!
கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!
பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!
மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions