கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!

Bookmark and Share

கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!

இந்த வருடம் பிறந்து மூன்று மாதங்கள் முடியவில்லை அதற்குள் 30க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளன. தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் பல படங்கள் வெயிட்டிங்.

கூடவே தேர்வு நேரம் என்பதால் மொத்தமாக கோடைவிடுமுறையில் ஏகப்பட்ட படங்கள் தியேட்டருக்கு வர காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் பல படங்கள் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் என்பது ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா!கொம்பன், ஓ காதல் கண்மணி, மாஸ், மகாபலி, ரஜினிமுருகன் என கோடையில் ரிலீஸ் ஆக உள்ள படங்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது.

இவற்றில் குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லக்ஷ்மிமேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கும் கொம்பன் படத்தை மார்ச் 27ஆம் தேதி  வெளியிடத் திட்டமிட்டிருந்தார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா. இதேநாளில் சிம்புவின் வாலு படம் உட்பட இன்னும் ஒரு சில சிறிய படங்களும் வெளிவர இருந்தன.

வாலு படம் மார்ச் 27 அன்று வெளிவரவில்லை என்றும், மே1 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் தகவல் அடிபட்டது. எனவே மார்ச் 27 அன்று கார்த்தி நடித்துள்ள கொம்பன் படம் தனியாக களமிறங்கி காசை அள்ளப்போகிறது என்று பலரும் நினைத்தநிலையில் தற்போது கொம்பன் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஏப்ரல் 2 அன்று கொம்பன் படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏன் தள்ளி வைப்பு?கொம்பன் படத்தை வெளியிடக்கூடாது என்றும் மீறி வெளியிட்டால் தியேட்டர்களில் பிரச்சனை செய்வோம் என்றும் புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

அதன் காரணமாக கொம்பன் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் தயங்குகிறார்களாம். அவர்களை சமாதானப்படுத்த காலஅவகாசம் தேவைப்படுவதால்தான் கொம்பன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனராம்.


Post your comment





Related News
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
\'கொம்பன்\' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!
கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
அன்று சண்டியர், இன்று கொம்பன்... - இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி? - சீமான்
முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு
350 தியேட்டர்களில் கொம்பன்!
கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!
பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!
மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions