350 தியேட்டர்களில் கொம்பன்!

Bookmark and Share

350 தியேட்டர்களில் கொம்பன்!

 வடசென்னையை சேர்ந்த ஐடி இளைஞனாக கார்த்தி நடித்த படம் - 'மெட்ராஸ்'. இந்தப் படத்தில் ஏற்று நடித்த வேடத்துக்கு நேர்மாறாக முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக கொம்பன் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.

முதல்முறையாக கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார். 'குட்டிப்புலி' முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் நடித்திருக்கிறார்.

மாமனார், மருமகனுக்கிடையே இருக்கும் பாசப்பிணைப்பைப் பற்றிய படம்தான் கொம்பன். சில நாட்களுக்கு முன்பு வெளியான 'கொம்பன்' படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

'கொம்பன்' படம் நேற்று தணிக்கைக்குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு  'யு' சான்றிதழ் வழங்கி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கத்தக்க படம் என தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் கொம்பன் படத்தை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடும் வேலையில் இறங்கிவிட்டார் இப்படத்தின் தயாரிப்பாளரான 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா.  

தமிழகத்தில் மட்டும் 350 தியேட்டர்களுக்கும் அதிகமாக 'கொம்பன்' வெளியாகவிருக்கிறது. உலகம் முழுக்க கொம்பன் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
\'கொம்பன்\' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!
கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
அன்று சண்டியர், இன்று கொம்பன்... - இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி? - சீமான்
முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு
கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!
கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!
பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!
மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions