கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!

Bookmark and Share

கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!

கார்த்தி, லட்சுமிமேனன் நடித்துள்ள படம் கொம்பன். முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் படத்துக்கு தடைவிதியுங்கள் என்று மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாண் உறவின்முறை சங்க தலைவர் கே.சி.செல்வகுமார் தணிக்கை குழுவிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் "ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் எங்கள் சமூகத்திற்கும் இன்னொரு சமூகத்திற்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. இந்த நிலையில் கொம்பன் என்ற பெயரில் ஒரு படம் வருவதை தொலைக்காட்சி மூலம் அறிந்தோம்.

முதுகுளத்தூர் பகுதியை கதைகளமாக கொண்டும், கொம்பன் என்ற கேரக்டர் ஆதிக்கவாசியின் கேரக்டராக சித்தரிப்பதாகவும் அறிகிறோம். எனவே கொம்பன் என்ற தலைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தால் படத்திற்கும் தடைவிதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. படம் தணிக்கைக்கு வரும்போது இந்த மனு கவனத்தில் கொள்ளப்படும் என்ற தணிக்கை குழு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
\'கொம்பன்\' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!
கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
அன்று சண்டியர், இன்று கொம்பன்... - இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி? - சீமான்
முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு
350 தியேட்டர்களில் கொம்பன்!
கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!
பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!
மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions