முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு

Bookmark and Share

முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு

கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள படம் கொம்பன். சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எம்.முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

படம் வருகிற ஏப்ரல் 2ந் தேதி வெளிவருகிறது. இந்தப் படம் ராமநாதபுரம் பகுதியை கதை களமாக கொண்டது. படத்திற்கு சில குறிப்பிட்ட ஜாதி அமைப்புகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நேற்று (மார்ச் 26) முதல்வரின் தனி பிரிவில் படத்தை தடை செய்ய வேண்டும் என்ற மனு கொடுத்தார்.

அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:

கொம்பன் படம் முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாகி இருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கிறது. அதோடு சுதந்திர போராட்ட தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை களங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

படத்தின் தலைப்பே வன்முறையை தூண்டுவதாக உள்ளது. கடந்த 6 மாதங்களாக தென் மாவட்டங்களில் ஜாதி மோதல்கள் அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் ஜாதி மோதலை மையமாக கொண்ட கொம்பன் படம் வெளியானால் அது கலவரத்தை தூண்ட வாய்ப்புள்ளது. எனவே படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!
\'கொம்பன்\' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!
கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
அன்று சண்டியர், இன்று கொம்பன்... - இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி? - சீமான்
350 தியேட்டர்களில் கொம்பன்!
கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!
கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!
பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!
மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions