கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!

Bookmark and Share

கொம்பன் படத்தின் தமிழக வசூல் 20 கோடி!

கொம்பன் படத்துக்கு எதிராக கிருஷ்ணசாமி கிளப்பிய சர்ச்சை கடைசியில் அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொடுத்துவிட்டது. கார்த்தி நடித்த எந்தப்படமும் எட்டாத அளவுக்கு வசூல் சாதனையை செய்துவிட்டதாம் கொம்பன் படம்.

சகுனி, பிரியாணி, அழகுராஜா என தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்ததால்... ஏறக்குறைய கார்த்தியின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. அதனால் அவரும் கடும் விரக்தியில் இருந்தார்.

இந்த நேரத்தில்தான் மெட்ராஸ் படத்தில் நடித்தார். அந்தப் படம் கார்த்திக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தாலும் வர்த்தக அளவில் ஓரளவுக்குத்தான் வெற்றியடைந்தது.

மூன்று தோல்விப்படங்களுக்கு பிறகு ஒரு வெற்றிப்படத்தில் நடித்தாலும் பருத்திவீரன் படம் போல் மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கொம்பன் படத்தில் நடித்தார்.

கார்த்தி எதிர்பார்த்தது போலவே கொம்பன் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, தமிழகத்தில் மட்டும் சுமார் 20 கோடி வசூல் செய்திருக்கிறது கொம்பன்.

எப்எம்எஸ், சாட்டிலைட் பிற மாநில வசூல் எல்லாம் சேர்த்தால் மேலும் 10 கோடி! இதை எல்லாம் கவனத்தில் வைத்து அடுத்தப் படத்திற்கு தன்னுடைய சம்பளமாக 10 கோடியை நிர்ணயித்திருக்கிறாராம்.

 


Post your comment





Related News
\'கொம்பன்\' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸானது கொம்பன்!
கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
அன்று சண்டியர், இன்று கொம்பன்... - இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி? - சீமான்
முதுகுளத்தூர் கலவரத்தை தவறாக சித்தரிக்கிறது : கொம்பன் படத்துக்கு தடைகேட்டு முதல்வரிடம் மனு
350 தியேட்டர்களில் கொம்பன்!
கொம்பன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!
கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!
பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!
மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions