கொம்பன் கருணாஸுக்கு 100 ஆவது படம்!

Bookmark and Share

கொம்பன் கருணாஸுக்கு 100 ஆவது படம்!

மேஸ்ட்ரோ என்ற பெயரில் மெல்லிசைக்குழுவை வைத்துக் கொண்டு கச்சேரிகள் செய்து வந்த கருணாஸை, சூர்யா நடித்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற காமெடி கேரக்டரில் அறிமுகப்படுத்தினார் பாலா.

அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்த கருணாஸ் வெகுவிரைவிலேயே பிஸியான காமெடி நடிகரானார். சினிமாவில் கிடைத்த வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளாமல் பட விநியோகம், படத்தயாரிப்பு, ஹோட்டல் பிசினஸ் என்று திசைமாறிப்போனார்.  

அதன் காரணமாக சினிமாவில் மார்க்கெட் இழந்தார். இந்நிலையில்தான் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டார்லிங் படத்தில் சிறு சம்பளம் வாங்கிக் கொண்டு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கருணாஸுக்குக் கிடைத்தது.

டார்லிங் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பில், கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். கொம்பன் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார் கருணாஸ்.

இந்தப் படத்தில் நகைச்சுவை ஏரியாவை தம்பி ராமையாவுக்கு ஒதுக்கிவிட்டனர். கொம்பன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு புதிய செய்தியைச் சொன்னார் கருணாஸ். 2001ல் நடிக்க வந்த அவருக்கு கொம்பன் 100 ஆவது படமாம்...! 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions