நாளை முதல் திரையரங்குகளில் கொம்பன் வருகிறான்!

Bookmark and Share

நாளை முதல் திரையரங்குகளில் கொம்பன் வருகிறான்!

கொம்பன் படத்திற்கு எழுந்துள்ள பிரச்னையால், படத்தை ஒருநாள் முன்னதாகவே அதாவது நாளை ஏப்ரல் 1ம் தேதியே ரிலீஸ் செய்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படத்தை சுந்தரபாண்டியன் இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் வருகிற 2ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தடை கோரி வழக்கு இந்நிலையில், கொம்பன் படத்தை தடைசெய்யக்கோரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி  மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்ட குழுவினருக்கு கொம்பன் படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகளுக்கு படம் திரையீடு அதன்படி இன்று(மார் 31ம் தேதி) காலை நீதிபதிகள் அடங்கிய குழுவினருடன் கிருஷ்ணாசாமி தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் கொம்பன் படத்தை காலை 7 மணிக்கு போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. நீதிபதிகள் படத்தை பார்த்து உரிய அறிக்கையை சென்னை ஐகோர்ட் மூலமாக மதுரை ஐகோர்ட் கிளைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

இது ஒரு புறமிருக்க திரையுலகம் ஒன்று திரண்டு கொம்பன் படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்கள் அதிகரித்தன. கொம்பனுக்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

இதற்கிடையே இப்பிரச்சனையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு கொம்பன் படத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தது. முன்னதாக இவர்கள் அனைவரும் கொம்பன் படத்தை பார்த்தனர். பத்திரிகையாளர்கள் சந்திப்புபின்னர் அவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக சந்தித்தனர்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, அழகன் தமிழ்மணி, ரமேஷ் கண்ணா, மதுரை அன்பு, கதிரேசன், பெப்சி சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கார்த்தி, கருணாஸ், ராதாரவி, டி.ஜி.தியாகராஜன், எடிட்டர் மோகன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்று கொம்பன் படத்திற்கு தங்கள் ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

கொம்பன் ஒருநாள் முன்னதாக ரிலீஸ் கொம்பன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுபடி இரண்டு நீதிபதிகளுக்கு கொம்பன் படத்தை திரையிட்டு காட்ட அனைத்து ஏற்பாடுகளையும் 7 மணிக்கே செய்துவிட்டோம். எங்களது தரப்பில் இருந்து எல்லாம் தயாராக இருந்தது. ஆனால் கிருஷ்ணசாமி ஆட்கள் மட்டும் ஒருமணி நேரம் தாமதமாக வந்தனர்.

வந்தவுடன் படத்தை பார்க்காமல் படத்தின் ஸ்கிரிப்ட் புக்கை கேட்டனர். கோர்ட் உத்தரவுபடி படத்தை பார்க்கத்தான் அனுமதி, ஒருவேளை கோர்ட் உத்தரவு அளித்தால் அதையும் நாங்கள் காட்ட தயாராக இருக்கிறோம்.

இப்படி சின்ன சின்ன விஷயங்களை மேற்கோள் காட்டி இரண்டு மணிநேரம் தாமதத்திற்கு பின்னர் படத்தை பார்த்தனர். படம் ஆரம்பித்த நான்கு நிமிடங்களுக்குள் இந்த காட்சி எனக்கு சரியாக புரியவில்லை, மீண்டும் திரையிட்டு காட்டுங்கள் என்றனர். க்யூபிக் முறையில் படத்தை திரையிடுவதால் தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் சில சிக்கல்களை சந்தித்தோம்.

கிருஷ்ணசாமி ஆட்கள் இதுபோன்று நடப்பதை பார்த்த நீதிபதிகள் இவர்கள் படம் பார்க்க வரவில்லை வேறு எதையோ மனதில் வைத்து இப்படி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டனர்.

எனக்கு கிருஷ்ணசாமிக்கும் எந்த அறிமுகமாமோ, பிரச்னையோ கிடையாது, இப்போது தான் அவரை முதன்முறையாக நேரில் சந்திக்கிறேன். எங்கள் தரப்பிலிருந்து எந்த பிரச்னையும் இல்லை, படத்தை நாளைக்கே நாங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.


Post your comment





Related News
தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்
டி.வி.களுக்கு ஏன் படங்களை இலவசமாக வழங்க வேண்டும்: காப்புரிமை பிரச்சனை எழுப்பும் ஞானவேல்ராஜா
தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா
கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” பெருமையுடன் வழங்கும் “புரோடக்ஷன் நெ.14”
கொம்பன் இயக்குநருக்கு கார் பரிசளித்த ஞானவேல் ராஜா!
\'கொம்பன்\' படத்திற்க்காக தெய்வத்திடம் போய் முறையிட்டேன் :ஞானவேல்ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions