'கொம்பன்' - எந்த சாதி வசனமும் இல்லை...!

Bookmark and Share

'கொம்பன்' - எந்த சாதி வசனமும் இல்லை...!

'கொம்பன்' திரைப்படம் வெளியானால் அது சாதிய மோதல்களுக்கு வழி வகுக்கும், படத்தில் சாதி அடிப்படையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்கு 'கொம்பன்' படம் போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் சாதியைப் பற்றிய ஆதரவுக் கருத்துக்களோ, எதிர்ப்புக் கருத்துக்களோ படத்தில் எந்த ஒரு காட்சியிலும் இடம் பெறவில்லை.

மாறாக, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான ராஜ்கிரண், “சாதின்னு வந்தால் பின்னாடியே சண்டைன்னு வரும்' என்று எந்த சாதியுமே வேண்டாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற அர்த்தத்தில் சொல்லும் ஒரு உயர்வான வசனம் கொண்ட காட்சிதான் இடம் பெற்றுள்ளது.

படத்தில் அரச நாடு, செம்மை நாடு, வெள்ள நாடு என்று மூன்று கிராமத்து மக்களின் வாழ்வியலைப் பற்றிய படமாகத்தான், அதிலும் மாமனார், மருமகன் இடையிலான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகத்தான் இந்தப் படம் இருக்கிறது.

யார் எந்த சாதி என்று எந்தக் காட்சியிலும் யாரும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.  படத்தைப் பார்க்காமலேயே இனி எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் படத்தைப் பற்றி தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. அதையே சமூக வலைத்தளங்களில் கூட திரைப்பட ரசிகர்களும் எதிரொலித்து  வருகிறார்கள்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா
இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions