கொம்பன் படத்தைப் பார்க்காத லட்சுமிமேனன்

Bookmark and Share

கொம்பன் படத்தைப் பார்க்காத லட்சுமிமேனன்

நடிப்புக்காக படிப்பை விட்ட நடிகைகள்தான் அதிகம். லட்சுமிமேனனோ படிப்புக்காக நடிப்பையே துறக்க முடிவு செய்தவர். பிறகு அவரது நலம்விரும்பிகள் பலரும் கேட்டுக் கொண்டதால் பரீட்சையை முடித்துவிட்டு மீண்டும் நடிக்க வர சம்மதித்தார்.

பரீட்சைக்காக புதுப்பட வாய்ப்புகளை மறுத்து வந்த லட்சுமிமேனன், தற்போது பரீட்சையை எழுதி முடித்துவிட்டதால் இனி புதுப்படங்களை ஒப்புக்கொள்ள இருக்கிறாராம்.

கொம்பன் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரளத்திலிருந்து சென்னைக் வந்திருந்தார் லட்சுமிமேனன். அப்போதுதான் இந்தத் தகவலை தெரிவித்தார்.

பிறகு கொம்பன் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிரிந்து கொண்டார்... கொம்பன் படத்தில் நடித்தது பற்றி சொல்ல வேண்டும் என்றால்... அந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கும்போது ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் இயக்குனர் முத்தையா கஷ்டப்பட்டு, விரிவாக சொல்லிகிட்டே இருப்பார்! அப்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு, நான்தான் நல்லா நடிக்கிறேனே, எதற்கு இவர் இப்படியெல்லாம் ஸ்ட்ரெயின் பண்ணி சொல்லி தருகிறார் என்று! சொல்லப் போனால் அவர் அப்படி சொல்லி தரும்போது விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன்! ஆனால் இப்போது தெரிந்தது எதற்கு அவர் அப்போது அப்படியெல்லாம் சொல்லி தந்தார் என்று! படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு கொம்பன் படத்திற்கு கிடைத்துள்ளது. தினம் தினம் எனக்கு நிறைய ஃபோன் கால்ஸ் வருகிறது.

என்று முத்தையா மற்றும் கொம்பன் பற்றி சிலாகித்துப்பேசிய லட்சுமி மேனன் அடுத்து சொன்னதுதான் ஹைலைட்ஸ். நான் இதுவரைக்கும் கொம்பன் படத்தை பார்க்கவில்லை. அதற்கு காரணம் இதுவரை நடந்து வந்த பரீட்சைதான். ஆனால் கண்டிப்பாக விரைவில் பார்த்து விடுவேன்! செம படிப்ஸா இருப்பார் போலருக்கே!

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions