கொம்பன் ராஜ்கிரணுக்கு தேசிய விருது?

Bookmark and Share

கொம்பன் ராஜ்கிரணுக்கு தேசிய விருது?

சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கியவர் முத்தையா. அவர் தற்போது கார்த்தியை வைத்து இயக்கியுள்ள படம் கொம்பன். முந்தைய படத்தைப்போலவே இந்த படத்தையும் கிராமத்து கதையில் இயக்கியுள்ள முத்தையா, கள்ளம் கபடமற்ற கிராமத்து மனிதர்களையும், அவர்களின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையையும் இதில் பதிவு செய்திருக்கிறாராம்.

அந்தவகையில், படத்தில் நடித்துள்ள கார்த்தி, ராஜ்கிரண், கோவை சரளா, லட்சுமிமேனன் ஆகியோரை அந்தந்த கதாபாத்திரங்களாக மாற்றிய டைரக்டர் முத்தையா, ராமநாதபுரம் பகுதியில் வாழும் பல புதிய முகங்களையும் கொம்பனில் நடிக்க வைத்திருக்கிறார்.

இதற்கு காரணம், வழக்கமான சினிமாவாக இல்லாமல் ஒரு இயல்பான மனிதர்களின் வாழ்க்கைப்பதிவாக இந்த படம் அமைய வேண்டும் என்பதற்காகத்தானாம். அதோடு, ராஜ்கிரணின் கேரக்டர், மகள்களை பெற்ற ஒவ்வொரு அப்பாக்களின் மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் உருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். அவரும் அதை உணர்ந்து மிக இயல்பாக நடித்திருக்கிறாராம்.

இதை அந்த படத்தில் அவருடன் நடித்த கருணாஸ் உள்பட அனைவருமே கூறுகின்றனர். மேலும், அவருக்கு மஞ்சப்பை படத்தில் நடித்ததற்கே தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும், தவறிவிட்டது. ஆனால், அந்த விருது இந்த படத்தில் நிச்சயமாக கிடைக்கும். அந்த அளவுக்கு அவரது நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions