3 படங்கள்..முதல் நாள் வரவேற்பு எப்படி ?

Bookmark and Share

3 படங்கள்..முதல் நாள் வரவேற்பு எப்படி ?

2015ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டத்தின் முதல் கட்டமாக ஏப்ரல் 1ம் தேதியே இந்த விடுமுறைக்கான படங்களின் வெளியீடு ஆரம்பமாகிவிட்டது. 'கொம்பன்' படத்திற்கு எழுந்த எதிர்ப்புகளால் திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே படத்தை வெளியிட்டார்கள்.

வழக்கமாக ஒரு படம் காலையில்தான் வெளியாகும். மாறாக 'கொம்பன்' படம் மாலைக் காட்சியில்தான் வெளியானது. இருந்தாலும் படத்திற்கு எழுந்த எதிர்ப்புகளால் கிடைத்த பரபரப்பை அடுத்து மாலைக் காட்சியே அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்ததாம்.

நேற்றும் தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு நல்ல ஓபனிங் இருந்ததாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று வெளியான 'நண்பேன்டா' படம், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள மூன்றாவது படம். நயன்தாரா, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் இரண்டாவது முறையாகக் கூட்டணி சேர்ந்து, 'இது கதிர்வேலன் காதல்' படத்தைப் போலவே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

உதயநிதி ஸ்டாலின் உடனடியாக கூட்டணியை மாற்றுவது அவருக்கு நல்லது. மல்டிபிளக்ஸ்களில் மட்டும் இந்தப் படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு இருக்கலாம் என்கிறார்கள். விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமான 'சகாப்தம்'  படத்தை அவரது கட்சிக்காரர்களே பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.

சண்முகப் பாண்டியனுக்கு உடனடித் தேவையாக நல்ல ஸ்டைலிஸ்ட். ஆடை விஷயத்திலும், மேக்கப் விஷயத்திலும் இன்னும் அதிக மாற்றமும் , நடிப்பில் இன்னும் அதிகமான பயிற்சியும் அவருக்குத் தேவை.

குறைந்த பட்சம் அவருடைய அப்பா படங்களையாவது அவர் அதிகமாகப் பார்த்தால் எப்படி உருட்டி, மிரட்டி நடிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளலாம். மகன் படத்தில் தலையைக் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி உடல்நிலை முடியாத நிலையிலும் விஜயகாந்த் கிளைமாக்சில் நடித்திருக்க வேண்டுமா..? என அவருடைய கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள்.

ஆக, ஏப்ரல் முதல் வார ரேஸில் 'கொம்பன்' நிறையவே முந்துகிறார். தமிழகம் முழுவதும் படம் வசூலைக் குவிக்கக் காரணமாக இருந்த புதிய தமிழகத்தினருக்குத்தான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions