கொம்பன், நண்பேன்டா எந்தப் படத்துக்கு வசூல் அதிகம்?

Bookmark and Share

கொம்பன், நண்பேன்டா எந்தப் படத்துக்கு வசூல் அதிகம்?

ஏப்ரல் 2 ஆம் தேதி கொம்பன், நண்பேன்டா, சகாப்தம் ஆகிய 3 படங்கள் வெளியாக இருந்தன. போராட்டம்.. ஆர்ப்பாட்டம்.. தணிக்கையின்போது தடங்கல்... கோர்ட்.. கேஸ்... என கொம்பன் படத்துக்கு ஏகப்பட்ட தடங்கல்கள்.

அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்த கொம்பன் திட்டமிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே திரைக்கு வந்துவிட்டது. நண்பேன்டா படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு வந்தது. 300 க்கும் குறைவான தியேட்டர்களிலேயே நண்பேன்டா வெளியாகி இருக்கிறது.

350 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது கொம்பன். கொம்பன் படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் பாஸிட்டிவ்வான ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது....!  நண்பேன்டா படத்துக்கு மக்கள் மத்தியில்  பாஸிட்டிவ் ரிப்போர்ட் இல்லை.

எனவே பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நண்பேன்டா படத்தின் காட்சிகளைக் குறைத்துவிட்டு, கொம்பன் படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்களாம்.

உதாரணமாக, சென்னையில் உள்ள எஸ்கேப் தியேட்டரில் - நண்பேன்டா படம் 4 காட்சிகளிலும், கொம்பன் படம் 7 காட்சிகளிலும் திரையிடப்பட்டுள்ளன. மற்றொரு மல்ட்டிபிளக்ஸ்ஸான எஸ்2 தியேட்டரில் - நண்பேன்டா படம் 2 காட்சிகளிலும், கொம்பன் படம் 4 காட்சிகளிலும், லக்ஸ் தியேட்டரில் - நண்பேன்டா படம் 8 காட்சிகளிலும், கொம்பன் படம் 12 காட்சிகளிலும் திரையிடப்பட்டுள்ளன.

சென்னையின் புறநகரில் அமைந்துள்ள மாயாஜால் தியேட்டரில் - நண்பேன்டா படம் 13 காட்சிகளிலும், கொம்பன் படம் 20 காட்சிகளிலும் திரையிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் கொம்பன் படம் ஹிட்!


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions