5 ரூபாய் கொடுத்தால் 50 ரூபாய்க்கு நடிக்கும் கோவை சரளா!

Bookmark and Share

5 ரூபாய் கொடுத்தால் 50 ரூபாய்க்கு நடிக்கும் கோவை சரளா!

கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் சினிமாவுக்கு வந்தவர் கோவை சரளா. கோயமுத்தூர் தமிழ் பேசி நடித்து இன்று வரை தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் அவர்.

அதோடு, கமல்ஹாசன் வரை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் கோவை சரளா, மனோரமாவின் செண்டிமென்ட் அம்மா இடத்தை பிடிப்பார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் அவரோ, சமீபகாலமாக செண்டிமெனட் கதைகளுக்கும், செண்டிமென்ட் அம்மா நடிகைகளுக்கும் பெரிய வரவேற்பு இல்லாததால், தனது காமெடி ரூட்டையே விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு வருகிறார்.

மேலும், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலுமே டைரக்டர்கள் சொல்வதை கேட்டு விட்டு அப்படியே நடிப்பை வெளிப்படுத்தாமல் தானும் சில விசயங்களை யோசித்து அவர்கள் சொல்வதற்கும் மேலாக நடித்துக்காட்டுகிறாராம்.

இதுபற்றி கோவை சரளா கூறும்போது, நான் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து விட்டேன். அதனால் ஒரு காட்சியைப்பற்றி என்னிடம் சொல்லும்போதே, நானும் அதை எந்த மாதிரி வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பேன்.

அநத வகையில், டைரக்டர்கள் 50 சதவிகிதம் சொன்னால் நான் அதை 100 சதவிகிதமாக்கி விடுவேன். காரணம், எனக்கு எனது நடிப்பில் திருப்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில், 5 ரூபாய் எனக்கு சம்பளம் கொடுத்தாலும் நான் 50 ரூபாய்க்கான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் கோவை சரளா.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions