பாராட்டு மழையில் கோவை சரளா!

Bookmark and Share

பாராட்டு மழையில் கோவை சரளா!

பெரும்பாலும் முன்னணி நடிகர் நடிகைகள் பலரது இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வரும் நிலையில், மனோரமாவின் இடமும் காலியாகவே இருந்து வந்தது. மேலும், பல படங்களில் சரண்யா அம்மாவாக நடித்து வந்ததால் அந்த இடத்தை  அவர்தான்  பிடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால், இப்போது கொம்பன் படம் மூலம் இன்னொரு மனோரமா போன்ற கெட்டப்பில் நடித்து அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார் கோவை சரளா.  காமெடி நடிகையாக நடிக்கத் தொடங்கிய அவர், காஞ்சனாவுக்கு பிறகு இன்னும் பெரிய காமெடி நடிகையாகத்தான்  வலம் வந்தார்.

இந்த நிலையில்தான் கொம்பன் படத்தில் எதிர்பாராதவிதமாக அவருக்கு சென்டிமென்ட் வேடம் கிடைத்தது. அவரது வழக்கமான காமெடி தளத்தில் இருந்து மாறுபட்ட அம்மாவாக  நடிப்பை வெளிப்படுத்தினார் கோவை சரளா.

அதைப்பார்த்து விட்டு சினிமாத்துறையினர் மட்டுமல்லாது ரசிகர், ரசிகைகளும் ஏராளமானோர் அவரை தொடர்பு கொண்டு மனோரமா ஆச்சியை பாத்த மாதிரியே இருந்துச்சு என்று கூறுகிறார்களாம்.

அதனால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கும் கோவை சரளா, இனிமேல் காமெடியில் இருந்து மெல்ல மெல்ல விலகி, முழுநேர சென்டிமென்ட் அம்மாவாக அழுத்தமாக தன்னை பதித்துக்கொள்ளப்போகிறாராம்.

 


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions