எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!

Bookmark and Share

எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!

அவர், சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’, கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார்.

அதன் பின் இரண்டாம் இன்னிங்க்ஸ்  துவக்கினார் சினிமாவில்.இன்று தமிழ் போலவே தெலுங்கு, கன்னடம் என்று பறந்து பறந்து தாக்குகிறார்.

கோவை சரளா அவர்கள், இன்றுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இரக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.

கடந்த வருடம் டிசம்பரில் கடும் மழை, வெள்ளம் சூழ்ந்த போது பல லட்சங்களை வாரி வழங்கியவர், இந்த ரியல் ஹீரோயின். மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.

கல்வி என்று யார் வந்து நின்றாலும் தீர விசாரித்து விட்டு கேட்டதை விட அதிகமாக கொடுப்பவர் இவர்.

காரில் போகும் போது புத்தக மூட்டையுடன் நடந்து செல்லும் பெண் குழந்தைகள், மாணவிகளைப் பார்த்தால் காரில் ஏற்றிக் கொண்டு போய் இறக்கி விடுவார்.

பெண் குழந்தைகள்  என் போல கஷ்டப் படக்கூடாது என்பதில் மிக உறுதியாக நின்று, அவர்களின் கல்விக்காக பல லட்சங்களை அள்ளி வழங்கும் மனித நேயம்  கொண்டவர்.

கல்யாணம் முடித்தால் ஓரிரு குழந்தைகளுக்குத் தான் எனது சொத்துகள் போய்ச் சேரும். ஆனால், இப்போது உலகத்தில் கஷ்டப்படும் எல்லாக் குழந்தைகளும் என் குழந்தைகள் தான் என்கிறார்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா அவர்கள், தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்.

30  ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது.


Post your comment





Related News
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா
இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா!
நள்ளிரவில் கோவை சரளாவை அழைத்த கே.பாக்யராஜ்
பாராட்டு மழையில் கோவை சரளா!
மீண்டும் மீண்டும் பிறப்பது போல் இருக்கிறது - கோவை சரளா!
\'கொம்பன்\' - எந்த சாதி வசனமும் இல்லை...!
காஞ்சனா-2 வை எதிர்பார்க்கும் கோவை சரளா-தேவதர்ஷினி!
5 ரூபாய் கொடுத்தால் 50 ரூபாய்க்கு நடிக்கும் கோவை சரளா!
கோவை சரளாவின் கொங்கு தமிழை மாற்றிய கொம்பன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions