காஞ்சனா-2 வை எதிர்பார்க்கும் கோவை சரளா-தேவதர்ஷினி!

Bookmark and Share

காஞ்சனா-2 வை எதிர்பார்க்கும் கோவை சரளா-தேவதர்ஷினி!

முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். அப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகமாக முனி 3 கங்கா என்று மூன்றாவது பாகத்தை வேக வேகமாக தொடங்கினார்.

ஆனால், பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக அப்படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த நேரத்தில் அப்படத்துக்கு அவர் காஞ்சனா-2 என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஞ்சனா தனது சினிமா கேரியரில் மாபெரும் வெற்றி படம் என்பதால் இந்த டைட்டிலை வைக்க லாரன்ஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காஞ்சனா படத்தில் முக்கிய காமெடி வேடங்களில் நடித்திருந்த கோவை சரளா-தேவதர்ஷினி இருவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் படம் முழுக்க வருகிறார்களாம்.

அதோடு முதல் பாகத்தை விட, 2ம் பாகத்தில் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ். அதனால், கோவை சரளா-தேவதர்ஷினி இருவருமே இந்த படம் திரைக்கு வந்தால் தங்களது காமெடி கூட்டணிக்கு மார்க்கெட்டில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions