நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா

Bookmark and Share

நடிகர் சங்கம்  சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா

தென் இந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் –நடிகைகள் ஆகியோரை கணக்கெடுத்து அவர்களின் பொருளாதார நிலையை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ குருதட்சணை என்ற திட்டத்தை தென் இந்திய நடிகர் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தை சென்னையில் நடிகர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் இன்று நாடக நடிகர்கள் – நடிகைகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.

தென் இந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள சேலத்தை சேர்ந்த 147 உறுப்பினர்களின் விவரங்களை கணக்கெடுத்து பதிவு செய்யும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.

இதன்படி சேலம் நாடக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்முறை கலைஞர்கள் ஆகியோரின் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படும்.

அவர்கள் நடிக்க வந்த ஆண்டு, அவர்கள் நடித்த நாடகங்கள். அவர்களது பொருளாதார நிலை, அவர்கள் குடும்பத்தை பற்றிய விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

உறுப்பினர் பெயர், அவரது அடையாள அட்டை, அவர் குறிப்பிடும் தகவல் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்று இந்தப் பணிகள் தென் இந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், நகைச்சுவை நடிகையுமான கோவை சரளா தலைமையில் வந்த 6 பேர் குழுவினர் முன்னிலையில் நடந்தது. இந்தப்பணி நாளையும் நடக்கிறது.

முன்னதாக நடிகை கோவை சரளா நிருபர்களிடம் கூறியதாவது:–

நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய குரு தட்சணை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி கலைஞர்கள் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

கணக்கெடுப்பு முடிந்ததும் நலிந்த கலைஞர்களுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் மூலம் உதவி செய்யப்படும். இந்த பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறும் போது இங்கு உள்ள நாடக கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்பு வழங்கப்படும்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions