கருணாநிதியிடம் நகைச்சுவை தென்றல் பட்டம் பெற்ற காமெடியன் கே.பி.சிவா!

Bookmark and Share

கருணாநிதியிடம் நகைச்சுவை தென்றல் பட்டம் பெற்ற காமெடியன் கே.பி.சிவா!

சின்னி ஜெயந்த் இயக்கி நடித்த சின்னபுள்ள என்ற படத்தில் அறிமுகமானவர் காமெடியன் கே.பி.சிவா. அதன்பிறகு பிரசாந்த் நடித்த ஜாம்பவான், தம்பிக்கோட்டை, அது வேற இது வேற, ஒன்பதுல குரு என பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.

இதில், ஜாம்பவான் படத்தில் எனக்கு ஒரு கடமை பாக்கி இருக்கு என்று இவர் பேசி நடித்த டயலாக் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த நிலையில், தற்போது, நாரதன், போஸ் பாண்டி, திருநாள் என சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் கே.பி.சிவா.

மேலும், விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வந்ததாம். ஆனால், புலி படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தபோது அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம்.

இதுபற்றி நடிகர் கே.பி.சிவா கூறுகையில்,

விஜய் சார் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்த எனக்கு புலி படத்தில் அந்த வாய்ப்பு வந்தது.

ஆனால்,அப்போது என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நான் இருந்தேன். அதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. அது எனக்கு பெரிய வருத்தத்தை அளித்தது.

இருப்பினும், எதிர்காலத்தில் விஜய் சார் படத்தில் எப்படியேனும் நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன் என்று கூறும் கே.பி.சிவா. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு, சுமார் 50 நாடகங்களில் நடித்திருக்கிறாராம்.

எங்கே நீதி என்ற பெயரில் புகழேந்தி இயக்கிய நாடகத்தில் கருணாநிதி முன்னிலையில் நடித்து அவரிடம் பாராட்டு பெற்றிருக்கிறாராம். அப்போது நகைச்சுவை தென்றல் என்ற பட்டத்தை இவருக்கு சூட்டினாராம் கருணாநிதி.

இதுதவிர, கங்கா யமுனா, சரஸ்வதி, துளசி மாடம் உள்பட பல சீரியல்களிலும் நடித்துள்ள கே.பி.சிவா, என்.எஸ்.கிருஷ்ணனின் ரசிகராம். அதனால் அவர் மாதிரி கருத்து சொல்லும் காமெடியனாக வளர வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாம்.


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions