மகான் வேடத்தில் நடிக்கிறார் கே.ஆர்.விஜயா!

Bookmark and Share

மகான் வேடத்தில் நடிக்கிறார் கே.ஆர்.விஜயா!

எம்.ஜிஆர்., சிவாஜி போன்ற பிரபல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. சந்திரமுகி, தசாவதாரம் ஆகிய படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்தார்.

அதையடுத்து அவர் நடித்த சில படங்கள் திரைக்கு வரவில்லை.இந்த நிலையில், தற்போது குஷ்புவின் தம்பி அப்துல்லா நாயகனாக நடிக்கும் மாய மோகினி என்ற படத்தில் அடிகளார் போன்று ஒரு மகான் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கே.ஆர்.விஜயா.

திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில், கே.ஆர்.விஜயாவின் வேடம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு படம் முழுக்க அவரது கேரக்டரும் ட்ராவல் ஆகிறதாம்.

அதனால், இந்த படத்துக்கு 15 நாட்களுக்கு மேல் அவர் கால்சீட் கொடுத்து நடித்திருக்கிறாராம். மேலும், இதுவரை இந்த மாதிரியான மகான் வேடங்களில் நடித்ததில்லை என்பதால் இந்த வேடத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ளாராம் கே.ஆர்.விஜயா.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions