கிருஷ்ணா-வைபவ் நடிக்கும் கிரகணம்!

Bookmark and Share

கிருஷ்ணா-வைபவ் நடிக்கும் கிரகணம்!

கழுகு கிருஷ்ணாவுக்கு யாமிருக்க பயமே படத்திற்கு பிறகு மார்க்கெட் ஓரளவு சூடு பிடித்தது. இருப்பினும் அவருக்கு வந்ததெல்லாமே டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுதான்.

அதனால் வானவராயன் வல்லவராயன் படத்தில் மா.கா.பா.ஆனந்துடனும், வன்மம் படத்தில் விஜயசேதுபதியுடனும் இணைந்து நடித்தவர், இப்போது யாட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக கிரகணம் என்றொரு படத்தில் கப்பல் பட நாயகன் வைபவுடன் இணைந்து நடிக்கிறார். ஏப்ரல் 2-ந்தேதி இபபடத்தின் பூஜை சென்னையில் நடைபெற உள்ளது.

மேலும், இப்படத்தில் வைபவுக்கும் கிருஷ்ணாவுக்கு இணையான வேடம்தானாம். டமால் டுமீல், கப்பல் படங்களில் ஷோலோ ஹீரோவாக நடித்த வைபவ், அதற்கு முன்பு ஈசன், அனாமிகா, ஆம்பள படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். 

அந்த வகையில், இந்த படத்தில் அந்த படங்களை விடவும் அவருக்கு வெயிட்டான வேடமாம். அதாவது கிருஷ்ணாவும், வைபவும் எதிரும் புதிருமான வேடங்களில் நடிக்கிறார்களாம்.

முன்பு மணிரத்னம் இயக்கத்தில் பிரபு-கார்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம் படம் போன்று இந்த படமும் அனல் பறக்கும் கதையில் உருவாகிறதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions