கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகை காலமானார்

Bookmark and Share

கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகை காலமானார்

கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா(65) இன்று காலமானார். இவர் கொஞ்சும் குமாரி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார்கள்.

இவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த “பெற்றால் தான் பிள்ளையா“ நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக படத்தில் நடித்தார். ஹலோ Mr.ஜமீன்தார் படத்தில் M.R.ராதாவுக்கு ஜோடியாக நடித்த அனுராதா மேலும் கந்தன் கருணை , சிந்து பைரவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “மன்னன்“, “பணக்காரன்“ போன்ற 250-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த கடைசி படம் “ கிரிவலம் “ , இப்படத்தில் இவர் நடிகர் ரிச்சர்டின் பாட்டியாக நடித்துள்ளார்.இவருடைய தந்தை கே. எஸ். ராமசாமி பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர்.

கே.ஆர்.இந்திராவின் இறுதி சடங்கு நாளை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions