ஹீரோக்கள் பாடகராயிட்டு வர்றாங்க... அதனாலதான் நான் ஹீரோவாயிட்டேன்: பாடகர் கிரிஷின் அதிரடி பதில்

Bookmark and Share

ஹீரோக்கள் பாடகராயிட்டு வர்றாங்க... அதனாலதான் நான் ஹீரோவாயிட்டேன்: பாடகர் கிரிஷின் அதிரடி பதில்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எல்லாம் தற்போது பாடகர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில், பாடகர் ஒருவர் தற்போது ஹீரோவாக மாறியிருக்கிறார்.

வேட்டையாடு விளையாடு படத்தில் ‘மஞ்சள் வெயில் மாலையிலே’, ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் ‘ஜூன் போன ஜூலைக் காற்றே’  உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் பாடகர் கிரிஷ்.

இவர் நடிகை சங்கீதாவின் கணவரும்கூட. தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார். இவரது மனைவி நடிகை என்பதாலோ என்னவோ, இவருக்கும் நடிப்பு ஆசை துளிர் விட்டிருக்கிறது.

அதன்படி, தற்போது ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். தம்பி செய்யது இப்ராஹிம் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

பாடகராக வலம் வந்த கிரிஷ், திடீரென ஹீரோ பிரவேசம் எடுத்ததற்கான காரணத்தை அவரே விளக்கும்போது, ஹீரோவெல்லாம் பாடகர்கள் ஆகிட்டு வர்றாங்க. அதனால, நான் ஹீரோ ஆயிட்டேன். இதில் என்ன இருக்கிறது? என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே, பாடகரான ஹரிஷ் ராகவேந்திரா ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளார். தற்போது அந்த வரிசையில் பாடகர் கிரிஷும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions