கிரிஷ் - சிருஷ்டி டாங்கே நடிக்கு “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்“

Bookmark and Share

கிரிஷ் -  சிருஷ்டி டாங்கே நடிக்கு “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்“

பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” இந்த படத்தில் பாடகர் கிரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சிருட்டி டாங்கே நடிக்கிறார்.

மற்றும் வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தம்பி செய்யது இப்ராஹிம். ( இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் தம்பி செய்யது இப்ராஹீம் கூறியாதவது...

இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும் அதில் சில விஷயங்களை சொல்ல தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.

இந்த படத்திற்காக காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டது. கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட  பாடல்தான்.

படப்பிடிப்பு  தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் தம்பி செய்யது இப்ராஹீம்.


Post your comment





Related News
ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
நான் கண்மூடித்தனமான அஜித் ரசிகை- பிரபல நடிகை
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்!
சிருஷ்டி டாங்கேயிடம் ஏற்பட்ட மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions