சொந்த மொழியில் பிசியாகும் கிரிஷி தபண்டா

Bookmark and Share

சொந்த மொழியில் பிசியாகும் கிரிஷி தபண்டா

நே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் கிரிஷி தபண்டா. மிஸ் கன்னடமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அறிமுகமாகும் முதல் தமிழ் படம் வெளிவரும் முன்பே மூன்று கன்னடப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏற்கனவே கஹி, அகிரா படங்களில் நடித்து வரும் கிரிஷி. தற்போது அமரசித்ரா என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கர்நாடக மாநிலம் கூர்க்கை சேர்ந்த கிரிஷிக்கு தமிழில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசை.

நே படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். புஷ்கின் ராஜா என்ற புதுமுகம் இயக்கும் இந்த படத்திற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா வசனம் எழுதியுள்ளார், வீரக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறுவர்களின் வாழ்க்கையை கதைகளமாக கொண்ட இந்தப் படத்தில் கிரிஷி ஹீரோயின்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions