‘யாக்கை’ படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் முடித்தார் கிருஷ்ணா!

Bookmark and Share

‘யாக்கை’ படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் முடித்தார் கிருஷ்ணா!

கழுகு , யாமிருக்க பயமே படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகர் கிருஷ்ணா, தற்போது விரைவில் வெளியாகும் ‘யாக்கை’ திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றி கனியை சுவைக்க உள்ளார்.

‘ஆண்மை தவறேல்’ படத்தின் இயக்குனர் குழந்தை வேலன் இயக்கும் ‘யாக்கை’ படத்தை, முத்து குமரனின் ப்ரிம் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிருஷ்ணா – சுவாதி நடித்திருக்கும் இந்தப் படத்தின் டப்பிங் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தருவாயில், படத்தில் தனக்குரிய டப்பிங் பகுதியை ஒரே நாளில் முடித்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார் நடிகர் கிருஷ்ணா.

ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான ‘யாக்கை’ படத்தின் ஒரு பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பபை பெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பல வருடங்கள் கழித்து யுவனின் இசையில் தனுஷ் பாடுகிறார் என்ற செய்தியும் ரசிகர்களின் ஆர்வத்தை பெருமளவில் தூண்டியுள்ளது.

இப்படி சுவாரசியங்கள் மேல் சுவாரசியங்களைஅள்ளி வீசி கொண்டிருக்கும் இந்த நிலையில், தற்போது டப்பிங்கை ஒரே நாளில் கிருஷ்ணா முடித்திருப்பது ‘யாக்கை’ படத்திற்கு மேலும் சிறப்பை சேர்த்துள்ளது.

“பொதுவாகவே ஒரு படத்தின் டப்பிங்கை பேசி முடிக்க ஒரு வாரமாவது ஆகும். ஆனால் கிருஷ்ணா தனக்குரிய டப்பிங் பகுதியை ஒரே நாளில் பேசி முடித்ததை கண்டு நான் வியந்து போய்விட்டேன். நடிப்பின் மேல் அவர் வைத்திருக்கும் ஆர்வமும், காதலும் மட்டுமில்லாமல் அவரின் நம்பிக்கை, மனஉறுதி, உற்சாகம் என அனைத்தும் தான் அவரின் வெற்றி படிகளுக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறது” என்கிறார் யாக்கை படத்தின் தயாரிப்பாளர் முத்து குமரன்.

தற்போது போஸ்ட் பிரோடக்ஷனில் இருக்கும் யாக்கை திரைப்படம் விரைவில் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடத்தை பிடிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions