கிருஷ்ணா நடிக்கும் புதிய படம் பண்டிகை!

Bookmark and Share

கிருஷ்ணா நடிக்கும் புதிய படம் பண்டிகை!

கழுகு, யாமிருக்க பயமே படங்களின் வெற்றிக்குப்பிறகு கிருஷ்ணாவுக்கு ஒரு மார்க்கெட் ஏற்பட்டது. அதையடுத்து வானவராயன் வல்லவராயன் படத்தில் மா.க.பா.ஆனந்துடனும், வன்மம் படத்தில் விஜயசேதுபதியுடனும் இணைந்து நடித்தார்.

ஆனால் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தற்போது ஆர்யாவுடன் யாட்சன், விதார்த்துடன் இணைந்து விழித்திரு படங்களில் நடித்து வரும் கிருஷ்ணா. அடுத்தபடியாக டபுள் ஹீரோ கதைகளை தவிர்த்துவிட்டு சிங்கிள் ஹீரோ கதைகளாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

அதற்காக கடந்த சில மாதங்களாக ஏராளமான கதைகளை அவர் கேட்டு வந்தார். அப்படி கேட்டதில் தற்போது யாக்கை, பண்டிகை என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். யாக்கை படப்பிடிப்பு நடந்து வருகிறது. பண்டிகை படப்பிடிப்பு இம்மாதம் 19-ந்தேதி முதல் தொடங்குகிறது.

இந்த படங்களில் தன்னை ஒரு முழு ஹீரோவாக உயர்த்திக்கொள்ளும் முயற்சியாக ஆக்சன், காதல், காமெடி என அனைத்து விதமான நடிப்பையும் வெளிப்படுத்தி வரும் கிருஷ்ணா, தற்போது தனது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து யாட்சன் படத்தில் நடிப்பவர், அடுத்தபடியாக அண்ணன் இயக்கும் படத்தில் தான் மட்டுமே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions