நடிகர் கிருஷ்ணாவுக்கு நடிகையுடன் தொடர்பு: மனைவி போலீசில் புகார்!

Bookmark and Share

நடிகர் கிருஷ்ணாவுக்கு நடிகையுடன் தொடர்பு: மனைவி போலீசில் புகார்!

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து இவர் நடித்த 'யட்சன்' படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் விஷ்ணுவர்த்தனின் தம்பி ஆவார்.

இவருக்கும், கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கைவல்யா(29) என்ற என்ஜினீயருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 6–ந்தேதி திருமணம செய்து கொண்டனர்.

இந்தநிலையில், ஹேமலதா கோவை துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

நானும், நடிகர் கிருஷ்ணாவும் காதலித்து கடந்த 6.2.2014 அன்று திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் போது கிருஷ்ணாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 300 பவுன் நகை, ரூ.32 லட்சம் ரொக்கம் கேட்டனர். ஆனால் எனது பெற்றோர் 118 பவுன் நகை மற்றும் ரூ.35 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணத்துக்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் டைரக்டர் காலனியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் கணவருடன் வசித்து வந்தேன். திருமணமான சில நாட்களிலேயே கிருஷ்ணாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்ட மீதி நகைகளை வாங்கி வா எனக் கூறி என்னை சித்ரவதை செய்தனர்.

எனது கணவர் கிருஷ்ணாவுக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு உள்ளது. இதுபற்றி நான் கேட்ட போது எனது கணவரும், அவரது பெற்றோரும் சேர்ந்து என்னை சித்ரவதை செய்து வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். இதனால் நான் தற்போது எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். அதன் பிறகும் எனது கணவரும், அவரது தந்தை சேகர் என்ற குணசேகரன்(66), தாய் மதுபாலா(62) ஆகியோர் சேர்ந்து என்னை மிரட்டுகிறார்கள்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். புகாரின்பேரில் நடிகர் கிருஷ்ணா, அவரது தந்தை சேகர், தாய் மதுபாலா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ)– மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துதல், 406–நகையை வாங்கி ஏமாற்றுதல், 506(1)–கொலை மிரட்டல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி வருகின்றார்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions