கிருஷ்ணாவிற்கு தற்போது பண்டிகை காலம்

Bookmark and Share

கிருஷ்ணாவிற்கு தற்போது பண்டிகை காலம்

‘அலி பாபா’, ‘கற்றது களவு’, ‘கழுகு’ ஆகிய படங்களில் நடித்த கிருஷ்ணா தற்போது, ‘விழித்திரு’, ‘யட்சன்’, ‘யாக்கை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘யட்சன்’ படத்தை கிருஷ்ணாவின் அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இப்படங்கள் அனைத்தும் கூடிய விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கிருஷ்ணா மற்றொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்து வருகிறார். கிருஷ்ணாவுடன் ‘கற்றது களவு’ படத்தில் ஜோடியாக நடித்த விஜயலட்சுமி, தன்னுடைய டீ டைம் டாக்ஸ் புரொடக்‌ஷன் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். விஜயலட்சுமியின் வருங்கால கணவர் பெரோஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு ‘பண்டிகை’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions