எதிர்பாராத வகையில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது- கிருஷ்ணா

Bookmark and Share

எதிர்பாராத வகையில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது- கிருஷ்ணா

'கழுகு', 'வன்மம்', 'வானவராயன் வல்லவராயன்', 'யட்சன்' படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா கோவை, மேட்டுப் பாளையம் அருகே உள்ள பெத்தி குட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற என்ஜினீயர் பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 6–ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

கிருஷ்ணாவை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வரும் கிருஷ்ணாவின் மனைவி ஹேமலதா கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவரும், அவரது பெற்றோரும் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் செய்துள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணா, அவரது தந்தை சேகர், தாய் மதுபாலா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சற்றும் எதிர்பாராத வகையில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற அறிவுரைப்படி இருவருக்கும் இடையே தற்போது சமரச பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட விதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்’ என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions