கிருஷ்ணாவின் யாக்கை படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

கிருஷ்ணாவின் யாக்கை படப்பிடிப்பு முடிந்தது!

‘யட்சன்’ படத்திற்குப் பிறகு கிருஷ்ணா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘யாக்கை’. இதில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி நடித்து வருகிறார். இப்படத்தை ‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கி வருகிறார். 

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதை நடிகர் கிருஷ்ணா உறுதி படுத்தியுள்ளார். படத்திற்கான பின்னணி வேலைகளை தீவிரம் காட்ட படக்குழு முடிவு செய்துள்ளனர். விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான ‘நீ...’ எனத் தொடங்கும் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஐ டியூன் தமிழ் அட்டவணையில் முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல், யூடியூபில் ஒரு லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions