72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா

Bookmark and Share

72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா

'கிரகணம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். “ யட்சன்'' படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது மற்றும் ''விழித்திரு'' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.

தேதிகள் இல்லாத காரணத்தால் ஏப்ரல் 18 , 19  என தொடர்ந்து இரண்டு நாட்கள் ''யட்சன்'' மற்றும் விழித்திரு படங்களுக்கும் இரவு நேரங்களில் 'கிரகணம்' படத்திற்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது.

அப்படப்பிடிப்பு ஏப்ரல் 20ஆம் தேதி காலை வரையும் சென்றது. இது தினமும் நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல. இப்படி ஷூட்டிங் என அங்குமிங்குமாய் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

எனினும் அலைச்சலால் என் உடல்நிலைக் கெடாமல் பார்த்துக் கொண்டேன். இந்த மூன்று நாட்களும் எனக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து படக் குழுவினர்க்கும் நன்றி.” என்றும் மிளிரும் பணிவுடன் கூறினார் கிருஷ்ணா.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions