கிருஷ்ணாவின் யாக்கை படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!

Bookmark and Share

கிருஷ்ணாவின் யாக்கை படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!

விஜயசேதுபதியுடன் கிருஷ்ணா இணைந்து நடித்த படம் வன்மம். அதையடுத்து யட்சன், விழித்திரு, யாக்கை, கிரகணம், பண்டிகை ஆகிய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதில், யாக்கை படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று யாட்சன் படத்தில் நடிக்க ஆர்யா கால்சீட் கொடுத்து விட்டார். அவரை அப்போது விட்டால் அடுத்தபடியாக வேறு படங்களில் நடிக்க சென்று விடுவார் என்பதால், யட்சனில் நடித்து விட்டு யாக்கை படத்தை தொடருமாறு அப்படத்தின் டைரக்டரான கிருஷ்ணாவின் அண்ணன் விஷ்ணுவர்தன் கூறினார்.

அதனால் யாக்கை படக்குழுவுடன் கேட்டுக்கொண்டு யாட்சனில் முழுவீச்சில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் கிருஷ்ணா.இப்போது அப்பட வேலைகள் முடிந்துவிட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாக்கை படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விட்டது.

அதோடு இந்த படத்தில் நடித்துக்கொண்டே கிரகணம், பண்டிகை படங்களையும் தொடரப்போகிறாராம் கிருஷ்ணா. இதில் பண்டிகை படத்தில் ஒரு சைக்கோ வேடத்தில் நடிக்கும் அவர், இதுவரையில்லாத அளவுக்கு ஒரு மாறுபட்டை பர்பாமென்ஸை வெளிப்படுத்தி வருகிறாராம்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions